"துள்ளுற மாடு பொதி சுமக்கும்" ! பிள்ளையானுக்கு எச்சரிக்கை விடுக்கிறார் கிழக்கு முதல்வர் ஹாபீஸ் நஸீர் !!
கிழக்கு மாகாண சபையில் 2008 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட பிள்ளையான் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதைப்போன்ற நிதி வீண்விரயம் தமது ஆட்சிக்காலத்தில் இடம்பெறமாட்டாதென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். அக்காலப்பகுதியில் இடம்பெற்ற நிதி வீண்விரயம் குறித்த விடயங்கள் மிக விரைவில் அம்பலத்திற்குக் கொண்டுவரப்படும் என்றும் தற்போதைய ஆட்சியின் பாரபட்சமற்ற வெளிப்படை தன்மைகொண்ட ஒதுக்கீடுகளை ஒப்பிட்டு நோக்கும் சந்தர்ப்பம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார். மாகாண சபையின் ஜுன் மாதத்திற்கான அமர்வில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். மாகாண சபைத் தவிசாளர் சந்திரதாச கலபத்தி தலைமையில் சபை நடவடிக்கைகள் இடம்பெற்றன. இதன்போது நிதியொதுக்கீட்டுச் சமர்சீர் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் இரா.துரைரட்ணம் சுட்டிக்காடினார். இதேபோன்று நிதியொதுக்கீடுகளில் பாரபட்சம் மற்றும் புறக்கணிப்பு இடம்பெறுவதாக உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தனது...