கல்முனை மாநகர முன்னாள் மேயர் சிராஸ் இணைந்தார் அதாவுல்லா கட்சியில் -சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் உறுதி வழங்கினார் அதாவுல்லா
முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரசில் இணைந்தார் மற்ற கிராமங்களுக்கோ ,ஏனைய சமூகங்களுக்கோ பாதிப்பு எழாவண்ணம் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்கி தருவேன் என உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆயிரக்கணக்கான சாய்ந்தமருது மக்கள் முன்னிலையில் உறுதியளித்தார்
சாய்ந்தமருதுக்கான தனியான ஒரு உள்ளூராட்சி சபை கோரிக்கையை முவைத்து நேற்று 24.03.2014 இரவு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திலேயே இந்த நிகழ்வுகள் இடம் பெற்றது . கிழக்கு மாகான அமைச்சர் உதுமாலெப்பை,மாகாண சபை உறுப்பினர்களான ரீ,எல்.அமீர்,சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் உட்பட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் அடங்கலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.அதாவுல்லா கட்சியில் இணைந்தார்
Comments
Post a Comment