கல்முனை மாநகர பிரதி முதல்வர் பதவியை நற்பிட்டிமுனை கிராமத்துக்கு வழங்க வேண்டும்
கல்முனை மாநகர பிரதி முதல்வர் பதவியை நற்பிட்டிமுனை கிராமத்துக்கு வழங்குவதே பொருத்தம் என நற்பிட்டிமுனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமை கேட்டுக் கொண்டுள்ளனர்.
கல்முனை தொகுதியில் பெரும் பான்மை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை கொண்ட நற்பிட்டிமுனை கிராமம் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப் படுவதாகவும் தேர்தல் காலங்களில் ஆசை காட்டி மோசம் பண்ணுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வராக இருந்த சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்ததை அடுத்து அந்த பதவிக்கு இன்னும் எவரும் நியமிக்கப் படவில்லை .எனினும் பலர் ஊர் ரீதியாக அப்பதவியை பெற முயற்சிகின்றனர். கல்முனை மாநகர சபையில் கல்முனை குடி,மருதமுனை, சாய்ந்தமருது ஊர்களை சேர்ந்தவர்கள் முதல்வர்களாகவும் ,பிரதி முதல்வர்களாகவும் இருந்து வந்துள்ளனர். எனினும் நற்பிட்டிமுனை கிராமத்துக்கு முதல்வர் பதவியை வழங்கும் வாய்ப்பு இல்லாவிட்டாலும் பிரதி முதல்வர் பதவியையாவது வழங்க வேண்டும் என அந்தஊர் மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
இந்த விடயத்தில் எமது கிராமத்துக்கு கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உதவி புரிவார் என நம்புவதாக போராளிகள் பலர் தெரிவிக்கின்றனர்
Comments
Post a Comment