இரு புதிய பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்
இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (21) பிரதி அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்துக்கொண்டனர்.
மின்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரதி அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் பி. திகாம்பரமும் இன்று (21) ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொண்டனர்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இப்பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவும் உடனிருந்தார்.
Comments
Post a Comment