கல்முனை மாநகர சபையில் பஜட் அமளி
இன்று 23-12-2013 நடைபெற இருந்த கல்முனை மாநகர சபைக்கூட்டம் திடீர் என்று ஒத்திவைக்கப்பட்டதை ஆட்சேபித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலரும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் இணைந்து மாநகர சபை சபா மண்டபத்துக்கு முன்னால் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இன்று கல்முனை மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவிருந்தது.கூட் டம் பி.ப 2.30மணிக்கும் ஆரம்பமாகம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் உறுப்பினர்கள் கூட்டத்துக்கு வந்ததன் பின்னர் திடிரென கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை உறுப்பிர்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது .இதனை கண்டித்து இவர்கள் கோசமிட்டதுடன் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவின் பிரதிகளைக்கிழித்தெறிந்தனர்.
இன்று கல்முனை மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவிருந்தது.கூட்
இன்று சமர்ப்பிக்கப்படயிருந்த வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்படும் என்று பயந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இவர்கள் குற்றம்சுமத்தினர்.அத்துடன்.நி லைமையை பொலிஸார் தலையிட்டு கட்டுப்படித்தியத்துடன் முதல்வர் நிஸாம் காரியப்பர் மாநகர சபைக்கூட்ட மண்டபதின் முன்னால் வந்து கூட்டம் ஒரு கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்து விட்டுச்சென்றார்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதி மேயர் சிராஸ் மாநகர சபை உறுப்பினர்களான பிர்தௌஸ் ,நிசார்டீன் ,அமீர் ,தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களான அமிர்தலிங்கம்,விஜயரட்ணம் ,ஜெயகுமார்,கமலநாதன் ஆகியோரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் முபீத் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நபார் உட்பட 10 உறுப்பினர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
Comments
Post a Comment