கல்முனையில் முதல்வர் பிரதி முதல்வர் திருவிளையாடல்

கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதி முதல்வரல்ல, முதல்வராக சொல்லப்படும் நிசாம் காரியப்பர் பதில் முதல்வரே தவிர அவரும் முதல்வரல்ல என மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சிராஸ் மீராசாஹிபின் பெயர் கல்முனை பிரதி முதல்வராக இன்று  வரையிலும் தேர்தல்கள் ஆணையாளரினால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை.

கல்முனை முதல்வராக செயற்பட்ட சிராஸ் மீராசாஹிப் கடந்த நவம்பர் மாதம் தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார். 

இதன் காரணமாக ஏற்பட்ட முதல்வர் வெற்றிடத்திற்கு பிரதி முதல்வரான சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பதில் முதல்வராக நியமிக்கட்டு தற்போது செயற்படுகின்றார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணி நிசாம் காரியப்பரின் பெயரை முதல்வராக சிபாரிசு செய்து தேர்தல்கள் செயலகத்துக்கு அறிவித்துள்ளது. எனினும், சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கல்முனை முதல்வர் என இன்று திங்கட்கிழமை வரையிலும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை.

இதனால் கல்முனை பிரதி முதல்வரான நிசாம் காரியப்பர் பதில் முதல்வராகவே தற்போது செயற்படுகின்றார். நிசாம் காரியப்பரின் பெயர் கல்முனை முதல்வர் என வர்த்தமானி ஊடாக அறிவித்ததன் பின்னரே கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் பதவி வெற்றிடமாகும்.

கல்முனை மாநகர சபையின் முதல்வர் நிசாம் காரியப்பர் என்றும், பிரதி முதல்வர் சிராஸ் மீராசாஹிப் என்றும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் வரையில் கல்முனை மாநகர சபைக்கு முதல்வரோ, பிரதி முதல்வரோ இல்லை என மேலும் தெரிவித்தார்.


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி