அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்களுக்கான பயிற்சி பட்டறை


அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் கழக அங்கத்தவர்கள் மற்றும் மத்தியஸ்த சங்க உறுப்பினர்களுக்கான உதைபந்தாட்டம் மற்றும் அதனோடிணைந்த நுணுக்கங்கள் சம்மந்தமான பயிற்சி பட்டறை ஞாயிற்றுக்கிழமை (27) மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதான கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இப்பயிற்சி பட்டறையை இச்சங்கத்தின் தலைவரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப் தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்தார்.

பயிற்சி பட்டறையின் முக்கிய வளவாளராக ஆசிய உதைபந்தாட்ட சங்கத்தின் இணைப்பாளர் எம்.சீ. ஜமால்டீன் பங்கு கொண்டு உதைபந்தாட்டம் தொடர்பான முக்கிய நுணுக்க செயற்பாடுகள் தொடர்பாக விரிவான விளக்கங்களை தமிழ், சிங்கள மொழிகளில் விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் மற்றும் இச்சங்கத்தின் உறுப்பினர்களும் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தில் அங்கம் வகிக்கும் 27க்கு மேற்பட்ட கழகங்களில் அங்கம் வகிக்கும் வீரர்களும் 20 மத்தியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்