எங்கள் தேசம் செய்தி இணையத்தளம் அங்குரார்ப்பணம்
எங்கள்தேசம் செய்தி இணையத்தளம் நேற்று (சனிக்கிழமை) இலங்கை ஜமாஅத்தேஇஸ்லாமியின் தலைவர் உஷ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களினால்உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. ஜமாஅத்தே இஸ்லாமியின் ஊழியர்ஒன்றுகூடல் மாதாம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியில் நடைபெற்றபோதுஇணையதளம் அங்குரார்ப்பணமும், அறிமுக நிகழ்வும் நடைபெற்றது.
இணையதள அறிமுக உரையை அல்ஹஸனாத் சஞ்சிகையின் உதவி ஆசிரியர் ஜெம்ஸித்அஸீஸ் அவர்கள் நிகழ்த்தினார்கள். ஜமாஅத்தே இஸ்லாமியின் செயலாளரும் ஜஸ்ட் மீடியாபௌண்டேஷனின் தலைவரும் சட்டத்தரணி எம்.எஸ்.எம். பாரிஸ், அல்ஹஸனாத்சஞ்சிகையின் கௌரவ ஆசிரியர் ஏ.ரீ.எம். நவ்பல், அல்ஹஸனாத், எங்கள் தேசம்பத்திரிகையின் முன்னால் நிர்வாக ஆசிரியர் அப்துல்லாஹ் அஸாம் (இஸ்லாஹி), ஜஸ்ட்மீடியா பௌண்டேஷனின் ஏனைய ஊழியர்களையும் படத்தில் காணலாம்
www.engalthesam.lk
Comments
Post a Comment