கல்முனை பொது நூலகத்தை புனரமைப்பு செய்து, முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் பெயரை சூட்ட தீர்மானம்!

கல்முனை மாநகரில் அமைந்துள்ள பொது நூலகத்தை புனரமைப்பு செய்து, அந்நூலகத்துக்கு முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களது பெயரை சூட்டுவதற்கு தீர்மானித்திருப்பதாக மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போதே முதல்வர் இந்த அறிவிப்பை  வெளியிட்டார்.
1980ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களினால் அமைக்கப்பட்ட இந்நூலக கட்டிடத் தொகுதி, பின்னர் யுத்த சூழ்நிலை காரணமாக கல்முனை பொலிஸ் நிலையமாக இயங்கி வந்தது.
சில வருடங்களின் பின்னர் மீண்டும் அது நூலகமாக செயற்பட ஆரம்பித்த போதிலும் நீண்ட காலமாக தேவையான புனரமைப்பு செய்யப்படாமல் பொலிவிழந்து காணப்படுகிறது.
இது தொடர்பில் நான் முதல்வராக பதவியேற்றது முதல் பல தரப்பினரும் என்னிடம் சுட்டிக்காட்டி வலியுறுத்தி வந்துள்ளனர். அதனால் யூ.என்.ஹெபிட்டாட் நிதியில் சுமார் 23 லட்சம் ரூபா செலவில் இந்நூலகத்தை புனரமைக்கும் வேலைத் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்க தீர்மானித்துள்ளேன் என்றும் அதற்கு அந்நூலகத்தின் பிதா மகனான முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் பெயரை சூட்டுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.
இதற்கு சபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்