கிழக்கு மாகாண ஆளுநருடன் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் றிஸான் சந்திப்பு!

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிஸானுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் றியல் அட்மிரல் மொஹான விஜயவிக்கிரம அவர்களுக்குமிடையிலான விஷேட சந்திப்பொன்று இன்று ஆளுநரின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் இடம்பெற்றது.
எமது நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாட்டில் அம்பாறை மாவட்;ட இளைஞர் பிரதிநிதியாக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிஸான் கலந்து கொள்ளவுள்ளார். இதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிஸான் முன்னெடுத்துவரும் செயற்றிட்டங்களுக்கு ஆளுநர் இதன்போது பாராட்டுக்களை தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட இளைஞர், யுவதிகளின் கல்வி, உயர் கல்வி, சுயதொழில் போன்ற துறைகளின் அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கான நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான விஜயவிக்கிரம அவர்களின் தலைமைத்துவத்தினையும் நேர்த்தியான சேவையினையும் பாராட்டி ஞாபகச் சின்னமொன்றை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிஸான் இதன்போது வழங்கி வைத்தார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்