“கசகசா” ஒரு போதைப் பொருளா?

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் “கசகசா” என்ற பொருள்ஒரு போதைப் பொருளாகும். இதைப் பற்றிய விளக்கத்தை பார்ப்போம்.
கசகசா வை ஆங்கிலத்தில் Opium Poppy என்று சொல்லப்படும்.
இந்த பப்பி விதை எனப்படும் கசகசா என்பது பப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி அதுமுழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா.
ஆனால் பசுமை நிறத்தில் இருக்கும்போது அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போதுஅந்த விதைப் பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால் அதுதான் ஓபியம் என்ற போதைப்பொருள்.
இந்த கசகசாவை ஓராளவுக்கு மேல் சாப்பிட்டால் போதையை கொடுக்கும். இதனால்தான் துபாய், கத்தார்,குவைத், ஓமான், சவூதி அரேபியா, சிங்கப்பூர், மலேசிய போன்ற நாடுகளில் இந்த கசகசா போதை பொருள்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்த நாடுகளுக்கு கசகசாவை கொண்டு சென்று பிடிப்பட்டால் சிறை தண்டனை நிச்சயம்.
கசகசா தொடர்பாக புதிய தலைமுறை என்ற தமிழக வாரப் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு செய்தியைபாருங்கள்.
சென்னையில் இருக்கும் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தந்த விளக்கம் : ”வளைகுடா நாடுகளான சவூதிஅரேபியா, கத்தார், துபாய், ஓமன் போன்ற நாடுகளில், கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப் பொருள்என்பது முழுக்க முழுக்க உண்மை!
இந்திய அரசின் நிதித் துறை, வருவாய்த் துறை மற்றும் சுங்க இலாகா மூலமாக இந்தியாவில் இருக்கும்ஒட்டுமொத்த சர்வதேச விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்குகசகசாவை கொண்டு செல்ல தடை விதிக்கும்படி உத்தரவே போடப்பட்டுள்ளது.
கூடவே, பயணிகளின் கண்ணில் படும்படியாக ‘கசகசாவைக் கொண்டுசெல்லத் தடை’ என்று கொட்டைஎழுத்துகளில் எழுதிவைக்கப்பட்டுள்ளது.
கசகசா விவகாரம் முதலில் பெரிதாக வெடித்தது சென்னை உயர் நீதிமன்றம் மூலமாகத்தான். 2009-ம் வருடம்கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான நந்தகுமார் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்அறியாமையால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களைப்பற்றி அந்த வழக்கு அலசியது. ஒருவர் பெங்களூருவைச்சேர்ந்த முகமது அப்துல் பஹதூர். இவர் இந்தியாவில் பிரபலமான கிராஃபிக்ஸ் டிஸைனர்; அசைவப் பிரியர்.அபுதாபிக்கு வேலை நிமித்தமாக 2004-ம் வருடம் பஹதூர் சென்றார். கூடவே, மளிகைப் பொருட்களும்எடுத்துப் போனார்.
அங்கே அந்நாட்டு அதிகாரிகளின் கண்ணில் கசகசா பட… எந்தக் கேள்வியும், விசாரணையும் இல்லாமல்ஷரியா கிரிமினல் கோர்ட்டில் பஹதூரை நிறுத்திவிட்டனர்.
கசகசாவை இந்தியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்துக்காக, 10 வருட சிறைத் தண்டனையும், இந்தியரூபாய் மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப் பட்டன.
இதேபோல குஜராத்தைச் சேர்ந்த ஹனிஃபாவும், ஸ்ரீராஜும் சவூதி அரேபியா சென்றார்கள். இவர்கள் ஹஜ்புனிதப் பயணத்தை மேற்கொண்டவர்கள். இவர்கள் இருவரிடமும் மொத்தம் 250 கிராம் கசகசா பாக்கெட்இருக்க… உடனடியாக 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது!
இந்த நாடுகளுக்கு வேறு காரியமாக பயணம் செய்தபோது இந்த விவரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்தநந்தகுமார் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி, அப்பாவி இந்தியர்களை மத்திய கிழக்கு நாட்டுசட்டங்களிலிருந்து காப்பாற்ற வழி கேட்டார்.
இதற்கு பதில் எதுவும் கிடைக்காதாலேயே பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்தொடர்ந்தார்.
கசகசா விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரபா ஸ்ரீதேவன், சத்தியநாராயணா ஆகியோர்முன்னிலையில் வந்தது.
இதில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், ‘உடனடியாக எல்லா விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும்கசகசா பற்றிய விழிப்பு உணர்வு உண்டாக்கும் அறிவிப்பை வைக்க வேண்டும். அது முக்கியமான இந்தியமொழிகள் அனைத்திலும் இருக்க வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உத்தரவு இட்டார்கள். நாங்களும்எங்களால் முடிந்த வரை வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களிடம் இதுபற்றி எச்சரிக்கிறோம்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது