அம்பாறை மாவட்டத்துக்கான பேரீத்தம்பழ விடயம் ஜனாதிபதி பிரதமர் கவனத்துக்கு சென்றுள்ளன
சவூதி அரசாங்கத்தினால் இலங்கை முஸ்லிம்களுக்கு நோன்புக்காக வழங்கப்பட்ட பேரீத்தம் பழ வினியோகத்தில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் புறக்கணிக்கப் பட்டிருப்பதாக அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் குற்றம் சாட்டியூள்ளது.
இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு நூறு வீத பங்களிப்பை வழங்கிய அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் பாரிய அநீதி இழைக்கப் படுவதாகவூம் அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எல்.சக்காப்.செயலாளர் எம்.ஏ.எம்.றஸீன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்
அவர்கள்; மேலும் தெரிவிக்கையில் கடந்த ஆண்டு 250 தொண் கிடைக்கப் பட்ட நிலையில் இந்த வருடம் 200 தொண்ணாக குறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20வீதமாககுறைக்கப்பட்டு குறைந்தளவூ பேரீத்தப் பழ தொகையே அம்பாறை மாவட்டத்துக்கு கிடைத்துள்ளது. அதுவூம் ஒரு வாரம் கழித்தே கிடைத்துள்ளது. கிடைத்துள்ள குறைந்த தொiகையை சனத் தொகைக்கேற்ப நோன்பு நோற்கும் முஸ்லிம் கிராமங்களுக்கு பகிர்ந்தளிப்பதில் சிக்கல் நிலை தோண்றியூள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக முஸ்லிம் கலாச்சார திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டும் எவ்வித பயனும் கிடைக்காத நிலையில் குறித்த விடயத்தை ஜனாதிபதிஇ பிரதமர் ஆகியோரது கவனத்துக்கு கொண்டுவரவூள்ளதாக அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எல்.சக்காப்.செயலாளர் எம்.ஏ.எம்.றஸீன் ஆகியோர் அறிவித்துள்ளனர்
Comments
Post a Comment