அம்பாறை மாவட்ட தமிழ் இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்
அம்பாறை மாவட்ட தமிழ் இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாபெரும் அமைதிப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் இன்று (2017.01.21) கல்முனையில் நடை பெற்றது.
தமிழர் பாரம்பரிய விளையாட்டில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு செலுத்தும் வகையில் தமிழர்களின் கலாச்சார பண்பாடுகள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்பதை வலியுத்தியே இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம் பெற்றது.
தமிழர் கலாச்சார பண்பாடுகள் தடை செய்யப்பட்டும் சீரழிக்கப்பட்டும் வருகின்ற இச்சூழ் நிலையில் தமிழ்நாட்டு வாழ் உறவுகளின் போராட்டத்துக்கு உரம் சேர்க்கும் வகையில் கல்முனை வாழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவு திரட்டும் வகையில் இந்த அமைதிப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் கல்முனை நகரில் இடம் பெற்றது. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக ஒன்று சேர்ந்த இளைஞர்கள் அங்கிருந்து அமைதிப் பேரணியாக கல்முனை நகரை சென்றடைந்து அங்கு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்த கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல தரப்பட்ட வாசகங்களை கொண்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பினர்.
இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் மீட்பு பேரவையின் தலைவர் கே.கணேஷ் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்கி அவரது கருத்தினையூம் தெரிவித்தார்
Comments
Post a Comment