சமுர்த்தி சிறுவர் கெகுலு கழகங்களுக்கிடையிலான கலை கலாசார போட்டிகள் - 2017
(பி.எம்.எம்.ஏ.காதர்)
கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரிவினால் நடாத்தப்படும் சமுர்த்தி சிறுவர் கெகுலு கழகங்களுக்கிடையிலான பிரதேச மட்ட கலை,கலாச்சாரப் போட்டிகள் அண்மையில் கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் சமுர்த்தி சிரேஷ்ட தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர் எம்.சாலிஹ் தலைமையில் நடைபெற்றது.
கல்முனை பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவில் உள்ள 31சிறுவர் கழகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சிறுவர்களுக்கான வலயமட்டப் போட்டிகள் நடாத்தப்பட்டு அதில் தெரிவு செய்யப்பட்ட சிறுவர்களுக்கான பிரதேச மட்டப்போட்டிகளே அண்மையில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் பாடல் நட்டார் பாடல், பேச்சு, அறிவிப்பு, சித்திரம்சி,றுவர் கதை எழுதுதல்உ,ரைநடை எழுதுதல், செய்யூள் எழுதுதல், நடனம், குறுநாடகம் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன இதில் 115 சிறுவர்கள் பங்குபற்றினார்கள் இச்சிறுவர்களிருந்து 1ஆம் இடங்களைப் பெற்ற 30 சிறுவர்கள் மாவட்ட மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இச் சிறுவர்கள் இம்மாதம் (ஆகஸ்ட்) 26ஆம் திகதி அட்டாளைச்சேனையில் நடைபெறவுள்ள மாவட்ட மட்டப்போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர். மாவட்ட மட்டத்தில் 1ஆம் இடங்களைப் பெற்று தெரிவு செய்யப்படும் சிறுவர்கள் தேசிய மட்டத்தில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்குபற்றுவார்கள்.
இந்த பிரதேச மட்டப்போட்டிகளுக்கு அதிபர் எம்.சி.நஸார் ஆசிரியர் எம்.எம்.ஏ.ஹக்கீம், அறிவிப்பாளர் ஏ.எல்.எம்.நயீம், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோத்தர் என்.எம்.நௌசாத்.சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் ஆகியோர் மத்தியஸ்தர்களாகக் கடமையாற்றி போட்டியாளர்களைத் தெரிவு செய்தனர்
Comments
Post a Comment