கல்முனையில் நடை பெற்ற கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா
கல்முனையில் நடை பெற்ற கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வு நேற்று புதன் கிழமை கல்முனை உவெஸ்லி கல்லூரி நல்லதம்பி மண்டபத்தில் நடை பெற்றது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தமிழ் இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வு மர்ஹூம் ஏ.எல்.எம்.பளீல் அரங்கில் நேற்று (02) கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இறுதி நாள் நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் கௌரவ விருந்தினராகவும் ,திகாமடுள்ள மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கே.கோடீஸ்வரன், பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் சிவப் பிரியா வில்வரத்தினம் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சு செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்
கிழக்குமாகாணத்தில் பல்துறை சார்ந்தவர்களான உலகறிந்த எழுத்தளர்கள் உமா வரதராஜன், சோலைக் கிளி, அரசரெத்தினம் உட்பட 12 பேருக்கு கிழக்குமாகாண வித்தகர் விருதும், 09 பேருக்கு சிறந்த தமிழ் இலக்கிய நூல் விருதும்,10 இளங் கலைஞர்களுக்கான விருதும், 07 அரச உத்தியோகத்தர் கலை இலக்கிய படைப்பாக்கப் போட்டிக்கான விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தமிழ் முஸ்லிம் பண்பாட்டை வெளிக் கொணரும் கலை கலாச்சார நிகழ்கவுளும் அரங்கேற்றப்பட்டன.
Comments
Post a Comment