அளுத்கம அனர்த்தம் இடம் பெற்று ஓராண்டு பூர்த்தி !! ஹரீஸ் MP யின் ஆதங்கம்
இதன் பின்னர் நடைபெற்ற எமது கட்சியின் உயர்பீட கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசிலிருந்து வெளியேற வேண்டுமென்று முதல் முதலில் காரசாரமாக விமர்சித்து வேண்டி நின்றதை நினைத்துப் பார்க்கிறேன்.
எமது கட்சியின் உயர்பீட கூட்டத்தின் பின்னர் நான் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலும் இதனை ஆணித்தரமாக வலியுறுத்தியிருந்தேன். இதன் ஒரு பகுதியை இங்கும் பகிர்ந்துகொள்கிறேன்.
கடந்த ஆட்சியின் மீது எம் மக்கள் அதிருப்தி கொள்ளவும் தற்போதைய ஆட்சி ஏற்படவும் காரணமாக இருந்த இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் இப்போதைய நல்லாட்சியிலாவது சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டி
யதுடன் பாதிக்கப்பட்டு இன்றுவரை
மீளமுடியாது அல்லல்படுவோருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படவேண்டும்.
Comments
Post a Comment