இனிவரும் காலங்களில் மாகாண சபைகளில் பெண்களுக்கு 30 வீதம் ஒதுக்கீடு

அமைச்சரவையில் தீர்மானம் 

இனிவரும் காலங்களில் மாகாண சபைகளில் பெண்களுக்கு 30 வீதம் ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்றும் இந்த தீர்மானத்தின்படி மாகாண சபை தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து கடந்த 20 ஆந்  திகதி நடை பெற்ற அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திர கட்சியும் இந்த தீர்மானத்தை கொண்டுவந்துள்ளன . 
 இலங்கையில் நாடாளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் உள்ளூராட்சி சபைகளிலும் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் இருந்தாலும் அது போதாது என்ற கருத்தே நிலவிவருகிறது. குறிப்பாக மாகாண சபைகளில் 6 சத வீத்திற்கும் மேலாக பெண்களுக்கான பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவிவந்தது. 

தற்போது இலங்கையிலுள்ள 9 மாகாண சபைகளிலும் 447 உறுப்பினர்கள் அங்கத்துவம் பெற்றுள்ள போதிலும் 5 சத வீதத்திற்கும் குறைவான பெண்களே அவற்றில் இடம்பெற்றுள்ளனர். 

குறிப்பாக 36 உறுப்பினர்களை கொண்டுள்ள கிழக்கு மாகாண சபையில் அமைச்சரான ஆரியபதி கலப்பதி மட்டுமே பெண் உறுப்பினராக பதவி வகிக்கின்றார். 38 உறுப்பினர்களை கொண்ட வட மாகாண சபையிலும் அனந்தி சசிதரன் மட்டுமே பெண் உறுப்பினராகவிருக்கின்றார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி