மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசலின் மூன்றாவது மாடிக்கான கட்டிப்பணிகள் ஆரம்பம் நிதி உதவி வழங்கமாறு கோரிக்கை


(பி.எம.;எம்.ஏ.காதர்)
மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசலின் மூன்றாவது மாடிக்கான கட்டிப்பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.பள்ளிவாசலின் புதிய தலைவரும் ,உதவிக் கல்விப் பணிப்பாளருமான  ஏ.எல்.சக்காப் கட்டிப்பணியை ஆரம்பித்து வைத்தார். இதில் முன்னாள் தலைவர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். 
சுமார் பத்துக் கோடி  ரூபா செலவில் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ள இப்பள்ளி வாசலின் கட்டிபணி அரைப்பகுதி  முடிவடைந்தள்ளது. இக் கட்டிடப் பணிக்கான அதிகமான நிதி மருதமுனை மக்களிடமிருந்தே  பெறப்பட்டுடள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 
இந்நிலையில் மிகுதி வேலைகளை முடிப்பதற்கு இன்னும் பெரும் தொகைப் பணம் தேவையாக உள்ளது. ஆகவே தொண்டு நிறுவனங்கள், தனவந்தர்கள், வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற சகோதரர்கள் இப்பள்ளிவாசலின் கட்டிடப்பணிக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
உதவிகளை வழங்க விரும்புகின்றவர்கள் பண அன்பளிப்புக்களை 6105263 என்ற இலக்க  இலங்கை வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கலாம். அல்லது தலைவர் ஏ.எல்.சக்காப் 0714418225, பொருளாளர் ஏ.எம்.அலியார் 0766254656 ஆகிய இலக்க தொலைபேசிகளோடு தொடர்பு கொண்டு ஏனைய விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.

1

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்