தாய்க்குலத்தை கௌரவித்த கல்முனை திவிநெகும சமுக அபிவிருத்திப் பிரிவு

(அப்துல் அஸீஸ்)


சர்வதேச மகளிர் தின வாரத்தினை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலக திவிநெகும சமூக அபிவிருத்தி பிரிவினால் நடாத்தப்பட்ட துறைசார்  மகளீர் கெளரவிக்கும் நிகழ்வு சமீபத்தில்   கல்முனை பிரதேச செயலக  மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் கல்முனை பிரதேசத்தில் உள்ள மகளீர்களில் சிறந்த முயற்சியாள பெண்,  சிறந்த சமூக சேவையாற்றும் பெண், ஆரோக்கியமான வயோதிபப்  பெண்,  முன்மாதிரியான தாய்,  வாழ்வில் முன்னேற்றகரமான பெண் ஆகிய துறைசார்ந்த பெண்கள் கெளரவிக்கப்பட்டனர்.
திவிநெகும முகாமைத்துவப்பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீறா  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  கல்முனை பிரதேச செயலாளர்  எம்.எச்.முகமட் ஹனி,  திவிநெகும தலைமைப்பீட  முகாமையாளர் எ.ஆர்.எம்.சாலிஹ்,  திவிநெகும திட்ட  முகாமையாளர் எ.எம்.எஸ்.நயீமா,  திவிநெகும வங்கி-வலய  முகாமையாளர் எம்.எம்.எம்.முபீன், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் யு.எல்.முஸ்பிறா, சிறுவர் மேன்பாட்டு  உத்தியோகத்தர் ஒ.கே.சரிபா உட்பட திவிநெகும அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.







Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்