எப்.ஏ. கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டித்தொடரில் கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகம் 3 : 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி

அகில இலங்கை உதைபந்தாட்டச்  சங்கம் தேசிய ரீதியில் பதிவு செய்யப்பட்ட உதைபந்தாட்டக் கழகங்களுக்கிடையே நடாத்திவரும்  எப்.ஏ. கிண்ண  உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டித்தொடரின் 475 போட்டியானது கல்முனை பிர்லியன்ட் விளையாட்க் கழகத்திற்கும் ஏறாவூர் யங் ஸ்டார் விளையாட்க் கழகத்திற்குமிடையே மட்டக்களப்பு பல்கழைக் கழக மைதானத்தில் நேற்று (27) மாலை நடைபெற்றது.
இப்போட்டியில்  கல்முனை பிர்லியன்ட் விளையாட்க் கழகம் 3 : 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1 : 1 என்ற கோல் அடிப்படையில் சம நிலையில் இருந்தபோதும் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் கல்முனை பிர்லியன்ட் அணி சார்பாக சௌஜான் அடுத்தடுத்து பெற்றுக் கொடுத்த கோலின் மூலம் கல்முனை பிர்லியன்ட் விளையாட்க் கழகம் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.
கல்முனை பிர்லியன்ட் விளையாட்க் கழகத்தின் 25 வருட கால பயணத்தில் முதன் முறையாக  எப்.ஏ. கிண்ண  உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டித்தொடரின் ஆறு சுற்றுத் தொடரில் வெற்றிபெற்றுள்ளமையும் அதன் மூலம் தேசிய ரீதியில் உள்ள 32 முன்னணி உதைபந்தாட்ட அணிகள் பங்பற்றும்  சுழரனெ க ழக 32 தொடரிற்குத் தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்டு 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்