எமது மனச்சாட்சியுடன் நாங்கள் முரண்படவில்லையென்றால் நம்மில் சமாதானம் நிலைத்திருக்கும்
கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்
(பி.எம்.எம்.ஏ.காதர்,யு.எம்.இஸ்ஹாக் )
ஒவ்வொரு மனித மனங்களிலும் முரண்பாடுகள் இல்லையென்றால் சமாதானம் தானாக வந்து விடும் எமது மனச்சாட்சியுடன் நாங்கள் முரண்படவில்லையென்றால் நம்மில் சமாதானம் நிலைத்திருக்கும் என கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார்.
இலங்கை சமாதானக் கற்கைகள் நிலையத்தினால் மருதமுனைனையைச் சேர்ந்த எம்.ஐ.ஏ.பரீட்(பறகத் டெக்ஸ்)ஏ.அப்துல் ஹமீட்(தோழர் இஸ்மாயில்)ஆகியோர் சமூக சேவையின் ஊடாக சமாதானத்திற்குப் பங்களிப்புச் செய்தமைக்காக “சமாதான தூதுவர்” விருது வழங்கிய நிகழ்வு செவ்வாய்க்கிழமை(29-03-2016) இரவு மருதமுனையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை சமாதானக் கற்கைகள் நிலையத்தின் பிரதம நிறைவேற்றும் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ்.தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விஷேட அதிதியாக அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் அஷ்செய்க் எப்.எம்.அகமதுல் அன்சார் மௌலானாவும் கலந்து கொண்டார்.
மேலும் அதிதிகளாக கல்முனை பிரதேச செயலக சிரேஷ்ட திவிநெகும தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,தென் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.எம்.பாஸில் உள்ளிட்ட வர்த்தகர்களும்,ஊர்பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இங்கு எம்.ஐ.ஏ.பரீட்(பறகத் டெக்ஸ்)ஏ.அப்துல் ஹமீட்(தோழர் இஸ்மாயில்) ஆகியோருக்கான “சமாதான தூதுவர்” விருதுகளை அதிதிகள் வழங்கி வைத்தனர்.
இங்கு வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :- இன்று கௌரவிக்கப்பட்ட இருவரும் மிகவும் சந்தோசமாக இருக்கின்றார்கள். இவர்களின் முகங்களில் மகிழ்ச்சி தெரிகின்றது காரணம் இவர்கள் மனங்களில் முரண்பாடுகள் இல்லை அதனால் இவர்கள் மிகவும் மகிச்சியாக இருக்கின்றார்கள்.
தன்னம்பிக்கையும்,விடா முயற்சியும் இருக்குமானால் நமது இலக்கை அடைய முடியும் என்பதற்கு இன்று கௌரவிக்கப்படுகின்ற இருவரும் முன்னுதாரணமாவார்கள் . இவர்கள் இருவரும் சமூக சேவைக்காக தங்களை அர்பணித்துச் செயற்படுகின்றவர்கள் இவர்கள் இருவரும் இந்த விருதைப் பெறுவதற்கு நூறு வீதம் தகுதியானவர் இவர்களை சமூகம் அங்கீகரித்திருக்கின்றது இவர்களின் சமூகப்பணி இன்னும் தொடர வேண்டும் என பிரார்த்திற்கின்றேன் என்றார்.
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் அஷ்செய்க் எப்.எம்.அகமதுல் அன்சார் மௌலானாவும், கல்முனை பிரதேச செயலக சிரேஷ்ட திவிநெகும தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,தெகிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.எம்.பாஸில் ஆகியோரும் கௌரவிக்கப்பட்ட இருவருக்கும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
Comments
Post a Comment