ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைகள் கடன் வேண்டாம் சலுகை வேண்டும்! "அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் களத்தில்"

வங்கி கடன் மூலம் ஊடகவியலாளர்களுக்கு  மோட்டார் சைக்கள் வழங்குவதற்கு  ஊடக அமைச்சு  எடுத்திருக்கும் நடவடிக்கைகளை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி இன்று நடை பெறவுள்ள  கல்முனை  மாநகர சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப் படவுள்ளது .
இதற்கான பிரேரணை  இன்று நடை பெறும்  அமர்வில் மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பரினால்  முன் வைக்கப் படவுள்ளது.  இந்த பிரேரணை பிரதிகளை ஜனாதிபதி ,பிரதம மந்திரி ,ஊடக அமைச்சர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கவுள்ளதாக மாநகர முதல்வர் தெரிவித்தார் .

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்துக்கமைய இப்பிரேரணைக்கான  கோரிக்கை  சம்மேளனத்தின் உப தலைவர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம் ,செயலாளர் எஸ்.எல்.ஏ.அஸீஸ் ,பொருளாளர் யு.எம்.இஸ்ஹாக் ஆகியோரால் இன்று மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரிடம் வழங்கி வைக்கப் பட்டது .

இன்று மாலை நடை பெறவுள்ள மாநகர சபை அமர்வில் முதல்வரினால் இப்பிரேரணை சபைக்கு சமர்ப்பிக்கப் பட்டு தீர்மானம் நிறைவேற்றப் படவுள்ளது.
வரிசலுகை அடிப்படையில் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கள்  வழங்குவதாக ஆரம்பத்தில் ஊடக அமைச்சு அறிவித்துவிட்டு  வங்கி கடன் அடிப்படையில் வழங்குவதை எதிர்த்தே இந்த நடவடிக்கையில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளன  உபதலைவர் சலீம் தெரிவித்தார் . 


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்