அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விஷேட பொதுச்சபைக்கூட்டம்! ஆர்வத்துடன் கலந்து கொண்ட அங்கத்தவர்கள் !!
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம் மேளனத்தின் விஷேட பொதுச்சபைக்கூட்டம் இன்று 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மருதமுனை பொது நூலக மண்டபத்தில் இடம் பெற்றது .
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் உப தலைவர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம் பெற்ற இவ் விஷேட பொதுச் சபைக் கூட்டத்தில் சம்மே ளனத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், அங்கத்தவர்கள் நலனோம்பல் விடயங்கள் தொடர்பாகவும் விஷேடமாக கலந்தாலோசிக்கப் பட்டு எதிர்கால நலன் கருதி சம்மேளனத்தின் யாப்பு மாற்றம் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப் பட்டது.
சம்மேளனத்தின் செயலாளர் எஸ்.எல்.ஏ.அஸீஸ் ,பொருளாளர் யு.எம்.இஸ்ஹாக் உட்பட சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் 35க்கும் மேற்படாவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்ததுடன் எடுக்கப் பட்ட தீர்மானங்களுக்கும் ஆதரவு வழங்கினர் .

Comments
Post a Comment