பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் முதலாவது அபிவிருத்திப் பணியை கற்ற பாடசாலையில் இருந்து ஆரம்பித்தார்
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் பழைய மாணவனும் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப் பட்ட நவீன நுழைவாயில் நேற்று திங்கட் கிழமை திறந்து வைக்கப் பட்டது.
கல்லூரியின் முதல்வர் அருட் தந்தை பிறைனர் செல்லர் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் விளையாட்டு துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நுழை வாயிலை திறந்து வைத்தார்
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் விசேட அதிதியாகவும் , கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் கௌரவ அதிதியாகவும் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வே.மயில் வாகனம்,பீ.எம்.வை.அரபாத், ஆகியோரும் கல்முனை தமிழ் பிரிவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் பீ.ஜெகநாதன், முன்னாள் கல்லூரி முதல்வர் அருட் சகோதரர் ஸ்டீவன் மத்தேயு ,பொறியியலாளர்களான பீ.ஹென்றி அமல்ராஜ்,ஜி.அருண் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
Comments
Post a Comment