கல்முனை பிரதேச விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையில் கலந்துரையாடல்

( எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசத்திலுள்ள கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, பொத்துவில் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள விளையாட்டு மைதானங்களை முதற்கட்டமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் மேற்கொண்டு வருகின்றார்.

இதற்கமைய கல்முனை சந்தாங்கேணி, நற்பிட்டிமுனை, மருதமுனை மசூர் மௌலானா,சாய்ந்தமருதது,சம்மாந்துறை,அட்டாளைச்சேனை,பாலமுனை, ஒலுவில் மற்றும் பொத்துவில் விளையாட்டு மைதானங்கள் சகல வசதிகளுடன் கூடிய மைதானங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இது தொடர்பான கலந்துரையாடல்கள் நேற்று சனிக்கிழமை(26) குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளில் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றன.

இக்கூட்டங்களில்  விளையாட்டுத்துறை அமைச்சின் பொறியியலாளர் தம்மிக ரணசிங்க, குறித்த பிரதேசத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை அபிவிருத்தி செய்யப்படவுள்ள மைதானங்களை பிரதி அமைச்சர் தலைமையிலான விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், இவ்வருடத்தில் எஞ்சியுள்ள 3 மாதங்களில் துரிதமாக மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஒரு வாரத்தினுள் மதிப்பீட்டு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு பிரதி அமைச்சர் அதிகாரிகளை பணித்தார்.

2016ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் குறித்த மைதானங்களுக்கு மண் நிரப்புதல், வடிகான், சுற்றுமதில், பார்வையாளர் அரங்கு, புற்தரை மற்றும் உள்ளக விளையாட்டு அரங்குகள் போன்ற பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதி அமைச்சர் ஹரீஸ் இதன்போது தெரிவித்தார்.





Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்