நற்பிட்டிமுனை நபீஸா ஆசிரியை ஓய்வு !! அல் -கரீம் பவுண்டேஷன் பாராட்டு !!!


35 வருடம் ஆசிரியத் தொழிலை  புனிதமாக  நிறைவேற்றி  ஓய்வு பெற்ற  நற்பிட்டிமுனை ஆசிரியை  திருமதி   எஸ்.என்.எச்.முகம்மட் (Nafeesa Teacher) அவர்களின் சேவையை பாராட்டி நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன்  ஏற்பாட்டில் சேவை நலன் பாராட்டு விழாவும் ,கல்வி சமூக சேவைக்கான தேசாபிமானி விருது வழங்கும் விழாவும்  ஆசிரியை நபீசாவின்  இல்லத்தில் இடம் பெற்றது .

கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அல் -கரீம் பவுண்டேஷன்  ஸ்தாபகருமான  சி.எம். முபீத்தின்  ஏற்பாட்டில் அல் -கரீம் பவுண்டேஷன்  தலைவர் சி.எம்.ஹலீம்  தலைமையில் நடை பெற்ற  நிகழ்வில் அல் -கரீம் பவுண்டேஷன்  செயலாளர்  யு.எல்.எம்.பாயிஸ் , ஆலோசகரும் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகாவித்தியாலய  ஆரம்பப் பிரிவு அதிபருமான திருமதி ஏ.முனாஸிர் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் நபீஸா ஆசிரியையின் கணவர் ஹயாத் முகம்மட் அவரது புதல்வர்கள்  அவரது குடும்பத்தினர்கள்  கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி  வாழ்த்துப்பா வாசித்து  வாழ்த்து மடல் வழங்கி  தேசாபிமான பட்டம் சூட்டி ,நினைவு பரிசு வழங்கி வைத்தனர் .







Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்