கல்வியற்கல்லூரி மாணவ ஆசிரியர்கள் தொற்று நோய் பாதிப்புக்குள்ளாகி இருந்தால் அறிவிக்குமாறு கோருகிறார் யாழ் கல்வியற்கல்லூரி பீடாதிபதி
யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரிரியில் கல்வி கற்கும் மாணவ ஆசிரியர்கள் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் தெரியப்படுத்துமாறு கோருகிறார் யாழ்ப்பாணம் கல்வியற்கல்லூரி பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம்.
தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் தோற்று நோய் காரணமாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரிரியில் கல்வி கற்கும் மாணவ ஆசிரியர்கள்,அவர்களது குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தங்களது பாடநெறிப் பொறுப்பு விரிவுரையாளர்களூடாகவோ அல்லது ஏனைய விரிவுரையாளர்களினூடாகவோ அல்லது நேரடியாகவோ என்னுடன் தொடர்பு கொள்ளு மாறு யாழ்ப்பாணம் கல்வியற்கல்லூரி பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் அறிவித்துள்ளார்.
மேலும் உங்களது சக மாணவர்கள் அல்லது அவர்களின் குடும்பம் பாதிப்புக்குள்ளாகி இருந்தால் அது தொடர்பாகவும் ஏனைய மாணவ ஆசிரியர்களும் தகவலை வழங்கலாமென பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் அறிவித்தல் விடுத்துள்ளார்
Comments
Post a Comment