கல்வியியற் கல்லூரிக்கு தெரிவானோருக்கு நற்பிட்டிமுனையில் பாராட்டு



நற்பிட்டிமுனை மண்ணில்  கல்வி மேம்பாட்டுக்கு உதவிவரும் அல் -கரீம்  பவுண்டேசன்  அமைப்பு  முதற்தடவையாக  நற்பிட்டிமுனையில் கல்விக்கல்லூரிக்கு  தெரிவான 05 ஆசிரிய பயிற்சி மாணவர்களை  கெளரவிக்கும் நிகழ்வு  கல்முனை ஜெயா ஹோட்டலில் நடை பெற்றது .

நற்பிட்டிமுனையில்  தரம் ஐந்து புலமைப்பரீட்சை ,சாதாரண மற்றும் உயர் தரப்பரீட்சைகளிலிலும் பல்கலைக்கழகம் செல்வோரையும்,உயர்பதவி பெறுவோரையும்  பாராட்டி  கெளரவிக்கின்ற  நிகழ்வை தொடர்ந்து இவ்வருடம் முதல் கல்விக்கல்லூரிக்கு  தெரிவானவர்களையும்  பாராட்டுகின்ற நிகழ்வு இன்று 12.10.2019 சனிக்கிழமை  இடம் பெற்றன

அல் -கரீம் பவுண்டேசன்  அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையில் இடம் பெற்ற  இந்த பாராட்டு விழாவில்  நற்பிட்டிமுனையை சேர்ந்த  05 மாணவர்கள் பாராட்டப்பட்டனர் 
எம்.எஸ்.எம்.சஜீர் (I C T  -ஆங்கில மொழி ) பஸ்துன்ரட்ட  கல்லூரி  ,களுத்துறை.
எச்.எம்.எம்.சஜான் ( கணிதம் - தமிழ் மொழி ) வவுனியா கல்லூரி 
எம்.ஐ.பார்ஹத் பார்ஹான ( கணிதம்- ஆங்கில மொழி ) யாழ்ப்பாணம்  கோப்பாய் கல்லூரி 
ஏ.சாஜிதா (உணவு தொழில் நுட்பம் -தமிழ் மொழி) தர்காநகர்  கல்லூரி 
எம்.என்.றுஸ்னா பஸ்லின் (இரண்டாம் மொழி - தமிழ் மொழி ) வவுனியா கல்லூரி 
இந்த நிகழ்வில் பெற்றோர்கள் உட்பட அல் -கரீம் பவுண்டேஷன் செயலாளர் யு.எல்.எம்.பாயிஸ் ,அமைப்பின் ஆலோசகர் எம்.எல்.ஏ.அஷ்ரப்  ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர் 




Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்