நாளை நள்ளிரவுடன் மேலதிக வகுப்புக்கள் நடத்த தடை


க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் - டியுசன் வகுப்புகள், மீட்டல் பயிற்சிகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் அனைத்தும் நாளை நள்ளிரவுடன் தடைசெய்யப்படுகின்றன.

இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் பொலிஸாருக்கோ அல்லது 1911 எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்பை ஏற்படுத்தி அறிவிக்கமுடியும்.

க.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் இரண்டாம் திகதி நாடாளவிய ரீதியில் நான்காயிரத்து 987 பரீட்சை மத்திய நிலையங்களில் ஆரம்பமாகிறது. இம்முறை ஏழு இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இந்த பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்