அரச தொழில் நுட்ப சேவைக்கு ஆட்சேர்ப்பு



அரச தொழில் நுட்ப சேவைக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்காக திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள் ளன.
அரச தொழில் நுட்பசேவையில் 3ம் தரத்திற்கு இந்த ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளதுடன் விண்ணப்ப முடிவுத் திகதி செப்டம்பர் 24ம் திகதியென பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சு தெரி வித்தது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன் திறந்த போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுவோருக்கான தகைமைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் விண்ணப்பதாரி 18-30 வயதிற்கு உட்பட்டவராகவும் க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம் உட்பட 6 பாடங்களிலும் க. பொ. த. உயர் தரத்தில் மூன்று பாடங்களில் சித்தியெய்தியவராகவும் இருக்க வேண்டும்.
அத்துடன் மொரட்டுவ அல்லது அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில் நுட்பத்தில் டிப்ளோமாப் பட்டம் பெற்றவராகவும் இருத்தல் வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி