கல்முனை பிரதேச கலாசார விழா; 12 பிரமுகர்களுக்கு கௌரவம்!


கல்முனை பிரதேச செயலக கலாசார பேரவை ஏற்பாடு செய்திருந்த விஷேட கலாசார விழா இன்று சனிக்கிழமை காலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கலாசார உத்தியோகத்தர் திருமதி வ.பற்பராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.





இவ்விழாவில் ஊடகம், இலக்கியம், சமூக சேவை, விளையாட்டு, மருத்துவம் ஆகிய துறைகளில் பங்களிப்பு செய்த 12 பேர் சிறப்பு அதிதிகளாக அழைக்கப்பட்டு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

*யூ.எம்.அதீக் சோலைக்கிளி (இலக்கியம்)
*எம்.எம்.ஏ.காதர் (இலக்கியம்)
*எம்.எச்.எம்.முஹைதீன் (சமூக சேவை)
*ஏ.எல்.இப்ராஹீம் (மருத்துவம்)
*எம்.ஐ.எம்.முஸ்தபா (விளையாட்டு)
*எம்.பி.அபுல் ஹசன் (இலக்கியம்)
*ஏ.எம்.பி.எம்.ஹுசைன் (சமூக சேவை)
*பி.எம்.எம்.ஏ.காதர் (ஊடகம்)
*ஏ.ஆர்.நிஹ்மத்துல்லா  (இலக்கியம்)
*யூ.எம்.இஸ்ஹாக் (ஊடகம்)
*எஸ்.எல்.ஏ.அசீஸ் (ஊடகம்)
*ஏ.எல்.ஏ.நாசர் (சமூக சேவை)












ஆகியோரே பாராட்டி கௌரவிக்கப்பட்ட பிரமுகர்களாவர். இதன்போது ‘முனைமலர்’ எனும் சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
அத்துடன் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் அவர்களின் சேவைகளைப் பாராட்டி கலாசார உத்தியோகத்தர் திருமதி வ.பற்பராசா சிறப்பு விருது வழங்கி கௌரவித்தார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி