மாகாண சபைகளுக்கான போனஸ் உறுப்பினர்கள் பெயர் அறிவிப்பு. கிழக்கிலிருந்து ஒரு தமிழர்.


நடைபெற்று முடிந்து வடமத்திய, கிழகக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு கிடைத்த 6 போனஸ்  ஆசனங்களுக்கான உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு 6 போனஸ் ஆசனங்கள் கிடைத்தன. ஒரு மாகாணத்திற்கு 2 ஆசனங்கள் வீதம் குறித்த 6 ஆசனங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் தேர்தல்கள் ஆணையாளருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் அனுப்பி வைத்துள்ளார். 

அநுராதபுரம் மாவட்டத்திற்கு சுசில் குணரத்னவும் பொலன்னறுவை மாவட்டத்திற்கு ஜெயந்த மாரசிங்கவும். வடமத்திய மதகாண  சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கேகாலை மாவடடத்திலிருந்து ஆனந்த மில்லங்கொடவும், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து அநுரபிரிய நமிந்தவும், சப்ரகமுவ மாகாண சபைக்கு சுதந்திர கூட்டமைப்பின் போனஸ் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு  மகாண சபைக்கு அமபாறை மாவட்டத்திலிருந்து டி.எம்.ஜயசேனவும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து துரையப்பா நவரட்னராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த 3 மாகாண சபைகளுக்கும் கூடுதலான வாக்குகளை பெற்ற ஐக்கிய மக்கள்  சுதந்திர கூட்டமைப்பிற்கு கிடைத்த 6 போனஸ் உறுப்பினர்களின் பெயர்களை அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் விடுக்கப்பட்ட வேண்டுதலை அடுத்து இவ்அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்