அம்பாறை பிரதேசத்தில் நாளை மின்வெட்டு


அம்பாறை கிரிட் உப மின் நிலையத்தின் திருத்த வேலைகள் காரணமாக நாளை (16) ஞாயிற்றுக்கிழமை அம்பாறை, கல்முனை ஆகிய மின் பொறியியலாளர் பிரிவுகளில் மின் விநியோகம் தடைப்படுமென அம்பாறை பிராந்திய மின் பொறியியலாளர் தெரிவித்தார்.
அம்பாறை நகர், கெமுனுபுர, கொண்டவட்டுவான், பிறகான, நாமல் ஓயா, இங்கினியாகல, உகண, கொணாகொல்ல, இறக்காமம், அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில், பாணமை, தீகவாபி, மல்வத்த, வளத்தாப்பிட்டி, சம்மாந்துறை, கல்முனை, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, பாண்டிருப்பு, மருதமுனை, நற்பிட்டிமுனை, நிந்தவூர், காரைதீவு, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், பெரியநீலாவணை, நாவிதன்வெளி போன்ற பிரதேசங்களில் மின்தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மட்டக்களப்பு மின் பொறியியலாளர் பிரதேசங்களிலும் அன்றைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்