புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் 30 ஆம் திகதிக்கு முன்
தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார நேற்று தெரிவித்தார்.
மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்ட மூன்று மாகாணங்களிலும் தேர்தல் காரணமாக விடைத்தாள் திருத் தும் பணிகள் முழுமையாக நிறைவடைய வில்லை.
அவ்வாறு முழுமையடையாத விடைத்தாள்கள் அடங்கிய பக்கற்றுக்களை பரீட்சைகள் திணைக்களத்திற்கு வரவழைத்து திருத்தும் பணிகளை முன்னெடுத்து வருகிறோம். 30 ஆம் திகதிக்கு முன்னதாக பெறுபேறுகள் வெளியிட்டு வைக்கப்படு மெனவும் அவர் கூறினார்.
அத்துடன் நடந்து முடிந்த பரீட்சை வினாத்தாளோ அதன் ஒரு பகுதியோ அல்லது வினாக்களோ எந்தவொரு சந் தர்ப்பத்திலும் பரீட்சைக்கு முன்னர் வெளியாகவில்லையென்பது பொலிஸ் விசாரணைகளினூடாக உறுதியாகியிருப்பதாக வும் பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக் காட்டினார்.
முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்குரிய பிரதேசங்களில் சி.ஐ.டி. யினர் விரிவான விசாரணைகளை நடத்திய பின்னரே இத்தீர்மானத்தை அறிவித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் மற்றும் சி.ஐ.டி. பணிப்பாளர் ஆகியோர் கையொப்பம் இட்டு ஒன்பது பக்க அறிக்கையொன்றினை தமக்கு சமர்ப்பித் திருப்பதாகவும் ஆணையாளர் கூறினார்.
Comments
Post a Comment