சாய்ந்தமருது திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு!
சாய்ந்தமருது திவிநெகும (சமுர்த்தி) வங்கியின் பின்புற வேலி தனிநபர் ஒருவரினால் உடைக்கப்பட்டு வங்கி முகாமையாளர் அச்சுறுத்தப்பட்ட சம்பத்தைக் கண்டித்து சாய்ந்தமருது திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் வங்கி உத்தியோகத்தர்களும் இன்று (30) வியாழக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனா.
சாய்ந்தமருது திவிநெகும வங்கிக்கு சொந்தமான பின்புற வளவினை தனிப்பட்ட நபரொருவர் தன்னுடைய வளவு என உரிமைகோரிக்கொண்டு வளவின் பின்புற சுற்றுவேலியினை உடைத்தெறிந்து அத்துமீறி உள்ளே புகுந்து வங்கி வளவினுள் நடப்பட்டிருந்த மரக்கண்டுகளையும் சேதப்படுத்தியுள்ளார்.
இன்று காலை கடமைக்கு சென்ற வங்கி முகாமையாளர் தனிநபர் ஒருவர் வங்கி வளாகத்திற்குள் அத்துமீறி நின்றதையும், வேலி உடைக்கப்பட்டதையும் கண்டு அவரிடம் நியாயம் கேட்க சென்றவேளை அந்த தனிநபர் தகாத வார்த்தை பிரயோத்தை பயன்படுத்தி முகாமையாளரை அச்சுறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக முகாமையாளர் பிரதேச செயலாளருக்கு முறையிட்டுள்ளார். இச்சம்பவத்தினை கல்முனை பொலிஸில் முறையிடுமாறு பிரதேச செயலாளர் வழங்கிய ஆலோசனைக்கமைவாக கல்முனை பொலிஸில் முகாமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதே சமயம் முகாமையாளரை அச்சுறுத்திய சம்பவத்தைத கண்டித்தும், முகாமையாளரை அச்சுறுத்திய நபரை கைது செய்யுமாறு கோரியும் வங்கியினை திறக்காமல் வங்கி மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து சம்பவம் தொடர்பாக கேட்டறிந்துகொண்டு, இது சம்பந்தமாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட திவிநெகு பணிப்பாளர் ஆகியோருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
Comments
Post a Comment