ஏமாற்று அரசியல் நிலைக்க இடமளிக்காமல் அதற்கான மாற்றத்தை நோக்கிய ஆரம்ப பயணத்துக்கு இத்தேர்தல் மூலம் பாதையமைக்க வேண்டும்.
தபால் மூல வாக்களர்களிடம் வேட்பாளர் சிராஸ் மீராசாஹிப் உருக்கமான வேண்டுகோள்!
அறிவுபூர்வமான ஒரு இயக்கமாக எமது சமூகத்திற்கான மாற்று அரசியலை வடிவமைக்கும் பெரும் போராட்டத்தை நாம் வென்றெடுக்கும் மிகப் பொருத்தமான ஒரு தொடக்கமாக இத்தேர்தலை நாம் பயன்படுத்த வேண்டும். இதனை முன்னெடுக்கும் தார்மீகப் பணியை சரியாகச் செய்யக்கூடியவர்கள் புத்திஜீவிகளும் அரச பணிபுரியும் கல்விச் சமூகமுமே ஆகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் மயில் சின்னத்தில் போட்டியிடும் 5 ஆம் இலக்க வேடபாளர் சிராஸ் மீராசாஹிப் பத்திரிகையாளர்களிடத்தில் கருத்து தெரிவித்தார். தபால்மூல வாக்களர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் செய்தி என்ன? எனக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இத்தேர்தலை ஒரு வேட்பாளரை வென்றெடுப்பதற்கான தேர்தல் என்ற குறுகிய நோக்கில் நான் பார்க்கவில்லை. இதனை சமகால முஸ்லிம் அரசியலில் ஒரு மாற்றுச் சிந்தனையை உருவாக்கும் போராட்டத்தின் தொடக்கமாகவே நான் பார்க்கின்றேன்.
சமூகக் கட்சி என்ற பெயரால் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றும் அரசியலைச் செய்துவருகின்ற முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மீதும் அதன் தலைமையின் மீதும் அடிமைப்பட்டுக்கிடக்கும் எமது சமூகத்தை மாற்றி சமூக விடிவை நோக்கிய அரசியலைச் செய்யும் ஒரு தலைமுறையை உருவாக்குவதற்கான ஆரம்பமாகவும் இத்தேர்தலை நான் நோக்குகின்றேன்.
அறிவுபூர்வமான ஒரு இயக்கமாக எமது சமூகத்திற்கான மாற்று அரசியலை வடிவமைக்கும் பெரும் போராட்டத்தை நாம் வென்றெடுக்கும் மிகப் பொருத்தமான ஒரு தொடக்கமாக இத்தேர்தலை நாம் பயன்படுத்த வேண்டும். இதனை முன்னெடுக்கும் தார்மீகப் பணியை சரியாகச் செய்யக்கூடியவர்கள் புத்திஜீவிகளும் அரச பணிபுரியும் கல்விச் சமூகமுமே ஆகும்.
எந்தவொரு தேர்தலுக்கும் தபால்மூல வாக்களித்து மாற்றத்தை உருவாக்கும் முதல் சக்தியாக இருப்பவர்கள் தபால்மூல வாக்களர்கள்தான். அவர்களால் ஏற்படும் மாற்றமே சமூகத்தில் ஏற்படும் மாற்றமாக உருவெடுக்கும். அத்தகைய பலம்பெற்ற தபால்மூல வாக்காளர்கள் தொடர்ந்தும் இந்த மண்ணில் ஒரு ஏமாற்று அரசியல் நிலைக்க இடமளிக்காமல் அதற்கான மாற்றத்தை நோக்கிய ஆரம்ப பயணத்துக்கு இத்தேர்தல் மூலம் பாதையமைக்க வேண்டும்.
அத்தோடு ஒரு மாநகரத்தின் முதல்வராக இருந்து நான் ஆற்றிய பணிகள் எதிர்காலத்தில் ஒரு பாராளுமன்றத்தின் பிரதிநிதியாகச் சென்று எமது மக்களுக்கும் சமூகத்திற்கும் சேவை செய்யக் கூடிய தகுதியை எனக்குத் தந்திருக்கிறது என்று படித்த சமூகம் உணர்ந்தால் என்னில் அரசியலுக்கான உண்மையும் நேர்மையும் இருக்கிறது என்று அவர்களால் சாட்சியமளிக்க முடிந்தால் தபால்மூல வாக்குகளின் போது நான் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மயில் சின்னத்திற்கும் எனது இலக்கமான ஐந்தாம் (5) இலக்கத்திற்கும் அவர்களின் வாக்குகளை அளித்து எமது வெற்றிக்கான முதல் மாற்றத்தை அவர்கள் வரலாற்றில் பதிய வேண்டும் என்று ஒவ்வொருவரையும்; மிகத் தாழ்மையுடன் நான் கேட்டுக் கொள்கின்றேன்” என்று டாக்டர் சிராஸ் வேண்டுகோள் விடுத்தார்.
Comments
Post a Comment