தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 171 பேர் கைது
தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 171 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரை தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டமை குறித்து 77 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொலிஸ் தலைமையகத்தின் தேர்தல் முறைப்பாட்டு பிரிவுக்கு 79 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் 86 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் கூறியுள்ளது.
அத்துடன் தேர்தல் திணைக்களத்திற்கு இதுவரை 549 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றில் கொழும்பிலேயே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment