கலாநிதி பட்டம் பெற்ற அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையத்தால் கௌரவிப்பு


(பி.எம்.எம்.ஏ.காதர்;)

மருதமுனை தாறுல் ஹூதா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபர்; அஷ்செயக் எம்.எல்.முபாறக் மதனி கலாநிதி பட்டப்படிப்பைப் ப+ர்த்தி செய்ததை கௌரவிக்கும் முகமாக மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம் ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு  கடந்த ஞாயிற்றுக்கிழமை(26-07-2015) இஸ்லாமிய பிரச்சார மையத்தின்  அலுவலகத்தில் நடைபெற்றது.

தாறுல் ஹூதா மகளிர் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்செய்க் ஆர்.நுவீஸ் மக்கி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எம்.எல்.முபாறக் மதனியின் தந்தையான அபூபக்கர் மசூத்லெப்பை(சாஹூல்ஹமீட் பையில்வான்)  பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
விஷேட அதிதியாக  மருதமுனை தாறுல் ஹூதா மகளிர் அரபுக் கல்லூரியின் தலைவர் டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரிஸ் மற்றும் அதிதிகளாக கல்லூரியின் பிரதி அதிபர் அஷ்செய்க் ஏ.எல்.ஏ.எஸ்.எம்.முபாறக் பாரி>கல்லூரியின் செயலாளரும்>பிரச்சார மையத்தின்  உப தலைவருமான ஆசிரியர் எம்.பகுறுதீன்> பிரச்சார மையத்தின் செயலாளர் அஷ்செய்க் எஸ்.எச்எம்.முஜீப் சலபி உள்ளிட்ட விரிவுரையாளர்கள் மையத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனிக்கு வாழ்த்துப் பத்;திரம் வாசித்து கையளிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். ஆசிரியர் ஏ.எம்.நஸ்றுத்தீன் நிகழ்சிசிகளைத் தொகுத்து வழங்கினார்.ஆசிரியர் எம்.எம்.அனஸ் நன்றியுரையாற்றினார்.







Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்