எனது வெற்றியின், முக்கிய பங்காளி றிசாத் பதியுதீன் - ஜனாதிபதி மைத்திரி
-கிளிநொச்சியிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா-
1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் முதன் முறையாக வடக்கிலிலும்,கிழக்கிலும் உள்ள அதிகளவான மக்கள் வாக்களித்தது எனக்கே என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் றிசாத் பதியுதின் எனது வெற்றியின் முக்கிய பங்காளியாவார் என்றும் கூறினார்.
கிளிநொச்சியில் மொத்த விற்பனை நிலையத்தை இன்று மாலை திற்நத வைத்து உரைாயற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் ஜனாதபதி மைத்திரிபால சிறிசேன தமதுரையில் கூறியதாவது,
அமைச்சர் றிசாத் பதியுதீன் எனது நெருங்கிய நண்பவராவார்.அவருக்கு எந்த அமைச்சை கொடுத்தாலும் அதனை திறம்பட செய்யக் கூடியவர்.அரசாங்த்தின் திட்டங்களை உரிய முறையில் முன்னெடுக்கும் ஒரு சிற்நத அமைச்சர் என்பதை இங்கு நான் கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்.
நான் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து 6 மாதங்கள் தான் ஆகின்றது.இந்த 6 மாதங்களுக்குள் பாரிய மாற்றங்களை செய்துள்ளேன்.குறிப்பாக வடக்கிலும்,கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் வாழும் மக்கள் அச்சமற்ற சூழலில் வாழ்வதற்கு வசதிகளை செய்து கொடுத்துள்ளேன்.
அது மட்டுமல்லாமல் வடக்கில் உள்ள மக்கள் எனக்கு அளித்த வாக்கின் காரணமாக அவர்கள் எனது உள்ளத்தின் ஒரு பகுதியில் அவர்களை வைத்துள்ளேன்.என்றும் அவர்கள் தொடர்பில் நான் கவனம் செலுத்துவேன்.என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.
இன்று யாழ்பாணத்துக்கும்,கிளிநொச்சிககும் நான் விஜயம் செய்துள்ளேன்.எல்லா பகுதிகளிலம் பல பிரச்சினைகள் இருக்கின்றது.குறிப்பாக மக்களின் வாழ்வாதார,கல்வி,சுகாதாரம்,விவசாயம் பிரச்சினைகள் பற்றி பேசுகின்றனர்..அது போல் குடிநீர் பிரச்சினைகள் இருக்கின்றது.
நீங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றால் சிறந்த பொருளாதாரம் இருக்க வேண்டும்.இதனை பொதுத் தேர்தலின் பின்னர் ஏற்படுத்தப்படுகின்ற புதயி அரசாங்கத்தின் ஊடாக சிறந்த விவசாய செயற்பாட்டு திட்டங்களுக்கு முன்னுரைிமையளித்து செயங்பட ஆலோசனை வழங்கவுள்ளேன்.அதிகமாக நாங்கள் பயன்படுத்தும் பருப்பு கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது என்றும் கூறினார்.
Comments
Post a Comment