இ.போ.ச சொத்துக்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தத் தடை


இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் ஊழியர்களை எந்தவொரு காரணத்திற்காகவும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என, உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தனவுக்கே அமைச்சர் இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளார். 

இதன்படி இபோச பஸ்களில் வேட்பாளர்களின் போஸ்டர்களை ஒட்டுதல் மற்றும் ஊழியர்களின் கடமை நேரத்தில் அவ்வாறான பணிகளுக்காக அனுப்புதல் போன்றன தடைசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். 

கடந்த காலங்களில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் ஊழியர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதால், பயணிகள், ஊழியர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கடந்த காலங்களில் அரசியல் கூட்டங்களுக்காக அனுப்பப்பட்ட பஸ் வண்டிகளுக்கான கட்டணம் கிடைக்கப் பெறாமையால் போக்குவரத்துச் சபைக்கு வறுமானம் குறைவடைந்ததாக கூறப்படுகின்றது. 

இதனால் எந்தவொரு அரசியல் ஊர்வலத்திற்கும் இபோச பஸ்களை வழங்க வேண்டாம் என, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அறிவுரை வழங்கியுள்ளார். 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்