இம்மாதத்தில் இரண்டு பௌர்ணமி இன்று நீலநிலா

வானில் ஒரே மாதத்தில் இரண்டு பெளர்ணமி தோன்றும் அரிய நிகழ்வான "புளூ மூன்" என்ற நிகழ்வு இன்று (31) நடைபெறவுள்ளது.
ஒரு மாதத்தில் 2 பெளர்ணமி நிகழ்கிறபோது 2வது பெளர்ணமி "நீல நிலவு" அதாவது புளூ மூன் என அழைக்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2ஆம் திகதி முழு நிலவு வானில் தோன்றியது. இன்று  மீண்டும் பெளர்ணமி வருகிறது. நிலவு முழு நிலவாக தோன்றும். இதுவே நீல நிலவு அழைக்கப்படும்.

நீல நிலவு என்று கூறினாலும் நீல நிறத்துக்கும், நிலவின் நிறத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஒரே மாதத்தில் 2 பெளர்ணமி வருவது அதாவது நீல நிலவு வருவது அபூர்வமானது. 

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு