கொழும்பில் தேர்தல் கலவரம் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
கொழும்பு ப்ளூமணெ்டல் வீதியில் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இரண்டு வேன்களில் வந்த சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனையடுத்து காயமடைந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இருவர் அதி தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
Post a Comment