பொத்துவிலில் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக கூச்சல் தேர்தல் பிரச்சாரத்தில் சற்று முன் பெரும் அமளிதுமளி


திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுகின்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பொத்துவிலில் இன்று (31)நடை பெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் சற்று முன் பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளன.
இந்த அமளி துமளியானது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப்ஹக்கிம் அவர்களின் பொத்துவில் வருகையினை எதிர்த்து எழுந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கலவரத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பொத்துவில் ஊடகவியலாளர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ரவூப்ஹக்கிம் அவர்களின் மெய்ப்பாதுகாவலரால் தாக்கப்பட்ட நிலைமையில் பொத்துவில் சட்டத்தரணி ஒருவர் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை  ரவூப் ஹக்கீம் மேடையில் பேச முற்பட்டபோதே கற்கள் மற்றும் முட்டைகளை கொண்டு எறிந்து கூக்குரல் இட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொத்துவிலில் அரசியல் வரலாற்றில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இவ்வாறான எதிர்ப்பு ஏற்பட்டமை இம்முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்