இந்திய குடியரசுத் தலைவரின் மறைவுக்கு முதலமைச்சர் விடுத்துள்ள அனுதாபச் செய்தி


இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானியாகவும், தொழில் நுட்ப வல்லுநராகவும், குடியரசுத் தலைவராகவும், பாரத மண்ணின் சாதி, மத பேதங்களற்ற முறையில் அனைத்து மக்களாலும் விஞ்ஞானி அப்துல் கலாம் என்று அழைக்கப்பட்டவருமான  ஏ. பீ. ஏ. கலாம் தனது 84 வது வயதில் மரணம் அடைந்த செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையும், அதிர்ச்சியும் அடந்தேன் என்று கிழக்கு மாகாண முலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது அநுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:


இளைஞர்கள் மத்தியில் அவருக்கு பெருமதிப்பிருந்து வந்தது. அவருடைய எளிமையான வாழ்க்கையும் அவரது எளிமையான பேச்சும் எல்லோரையும் கவரக் கூடியது. 'எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில்' என்ற அவர் கூற்றும்  'கனவு காணுங்கள்'  அந்தக் கனவை நனவாக்கப் பாடுபடுங்கள்  என்ற உரையும் இன்னும் அதன்பால் இளைஞர்களை ஈர்த்துள்ளது.

உலகம் போற்றும் விஞ்ஞானி அப்துல் கலாமின் மறைவு இலங்கை, மக்களுக்கு மாத்திரமல்ல உலக மக்களுக்கும் பெரும் பேரழிப்பாகும் அவர் உலக மக்கள் மனங்களிலும் இன்றைய இளைஞர்களின் தேடல்களிலும் அதிக கவனத்தை மேலோங்கச்செய்தவர். என்பதுடன் துரயத்தில் ஆழ்ந்துள்ள இந்திய மக்களுக்கு அந்நாரது குடுபத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் அந்நாரது மறுமை வாழ்வுக்காகப் பிரார்த்திக்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்