கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் உயர்தர மாணவர் தின விழா

கல்முனை  உவெஸ்லி உயர்தர பாடசாலையில்  இவ்வருடம் உயர்தர பரீட்சை எழுதும்  மாணவர்கள் ஏற்பாடு செய்த A /L  தின விழா  கல்லூரி அதிபர் வீ.பிரபாகரன் தலைமையில் திங்கட் கிழமை  பெற்றது .

நிகழ்வில் பிரதம அதிதியாக  கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் பீ.எம்.வை.அரபாத்  கலந்து கொண்டு சிறப்பித்தார் . கௌரவ அதிதிகளாக  கல்முனை தமிழ் பிரிவு கோட்டக்கல்வி  அதிகாரி பொ .ஜெகநாதன் ,காரைதீவு வைத்திய அதிகாரி  எம்.ஏ.பிரசாத் ,உவெஸ்லி உயர்தர பாடசாலை பிரதி அதிபர் எஸ்.கலையரசன் , துரவந்தியமேடு அ .த .க .பாடசாலை அதிபர் ந.தியாகராசா , உவெஸ்லி உயர்தர பாடசாலை உதவி அதிபர் எஸ்.   தேவச்சந்திரா , பாண்டிருப்பு மகா விஷ்ணு  வித்தியாலய முன்னாள் அதிபர்  சோ .கோவிந்தராஜா , உவெஸ்லி உயர்தர பாடசாலை பகுதி தலைவர் திருமதி பொ .ருத்ரா ஆகியோரும்  மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் , பழைய மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர் .

மாணவர் தின விழாவின்  சிறப்பம்சமாக கண்ணோட்டம் என்ற  சிறப்புமலர் வெளியிட்டு வைக்கப் பட்டதுடன், ஆசிரியர்கள் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வுகளும் , மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன .








Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்