2010ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சொந்த நிதியில் மருதமுனை பிரதேசத்க்கு உதவி செய்தவர் அமைச்சர் றிஷாட்


(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை பிரதேசத்திலே 2010ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சொந்த நிதியில் பண உதவி செய்து மக்களை ஆதரித்தவர் அமைச்சர் றிஷாட் பதியூதீன் ஆவார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மருதமுனை வேட்பாளர் சித்தீக் நதீரை ஆதரித்து நேற்று(29-07-2015) மருதமுனை ஹாஜியார் வீதியில் இடம் பெற்ற கருத்தரங்கில் விஷேட அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.
ஏ.ஆர்.இஹ்சான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் வேட்பாளர் சித்தீக் நதீர் கலந்த கொண்டார்.சிறப்பு அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மருதமுனை மத்திய குழுவின் தலைவர் சம்சுல் அமான் அவருடன் இணைந்து கொண்ட இன்னும் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இங்கு றஹ்மான் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:- அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களிலே தஞ்சமடைந்திருந்த மக்களைப் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்  அதன் பின்னர் அப்போது அமைக்கப்பட்டிருந்த அனர்த்த முகாமைத்துவ சபையிடம் தனது சொந்தப் பணம் இரண்டு இலட்சம் ரூபாவை வழங்கி மக்களுக்கு சாப்பாடு சமைத்துக் கொடுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 
அதுமாத்திரமன்றி வெள்ளத்திலே அள்ளுண்டு வந்து கிடந்த ஆத்து வாழை என்று சொல்லப்படுகின்ற நீர்தாவரங்களை அகற்றுவதற்கும் அவர் கொழும்பிற்குச் சென்று ஒரு இலட்சம் ரூபாவை கல்முனை மாநக சபைக்கு அனுப்பியிருந்தார்.
அதே சமயம் அந்த வெள்ள அனர்த்தத்தின் போது மருதமுனைக்கு வருகை தந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் சமையல் நடைபெற்ற இடத்திற்கு வந்து சமையலை ருசிபார்த்தார் அதை  அவரின் ஊடகவியலாளர்கள் படம் பிடித்து பத்திரிகையிலும் போட்டார்கள்;. கொழும்புக்குச் சென்று அபூஉபைதா மௌலவிக்கு 2 இலட்சம் ரூபா  பணம் அனுப்புவதாகச் சொல்லிவிட்டுச் சென்றவர் இதுவரை அந்தப் பணத்தை அனுப்பவே இல்லை.
அப்படிப்பட்ட தலைமைத்துவத்தைக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸூக்கு வாக்களிக்க வேண்டுமா ? மக்கள் கஷ்டப்படும் போது உதவி செய்த நல்ல தலைமைத்துவப் பண்பும் உண்மையும்,நேர்மையுமுள்ள உள்ள அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு  வாக்களிக்க வேண்டுமா? என்பதை மருதமுனை மக்கள் சிந்திக்க வேண்டும்.

எமது மண்ணில் இருந்து எமது சகோதரர் சித்தீக் நதீர் போட்டியிடுகின்றார் அவர் உழைக்கின்ற பணத்தில் பெரும் பகுதியை ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகின்றார்.அவரை நாம் வெற்றி பெறச் செய்வதன் மூலம் இன்னும் அவர் ஏழைகளுக்கு அதிகமான உதவிகளைச் செய்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படும் எனவே நமது ஊரின் மகன் நம்மிடம்  வாக்கு க்ர்ட்கின்றார்  நாம் அவருக்கு  வாகளித்து அவரை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என றஹ்மான் மேலும் தெரிவித்தார்.  

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்