முஸ்லிம் காங்கிரஸ் மகளிர் பிரிவு பணிப்பாளர் சல்மா ஹம்சா, ஹிஸ்புல்லாஹ்வை ஆதரிக்க தீர்மானம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மகளிர் பிரிவின் கிழக்கு மாகாண அமைப்பாளரும், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சா எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை ஆதரிக்க தீர்மானித்துள்ளார்.

முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் உடன் பிறந்த சகோதரியான இவர் கடந்த பல தேர்தலில் ஹிஸ்புல்லாஹ்விற்கு எதிராகவே செயற்பட்டு வந்தார்.
இந்த நிலையில் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவதற்கு இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த நிலையிலேயே அவர், தனது சகோதரரான ஹிஸ்புல்லாஹ்விற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார். இது தொடர்பில் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் தனக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் ஹிஸ்புல்லாஹ்வின் வெற்றிக்காக பிரசாரம் செய்யவள்ளதாகவும் சல்மா ஹம்சா தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்