ஆப்கானிஸ்தான் தலைநகரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 40 பேர் பலி - பலரின் நிலை கவலைக்கிடம்


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

முஹமத் நபியின் பிறந்தநாள் ஆண்டுதோறும் மீலாதுன் நபி என்னும் பெயரில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டின் மீலாதுன் நபி கொண்டாட்டங்கள் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் விமான நிலையத்துக்கு செல்லும் வீதியில் உள்ள உரனஸ் திருமண மண்டபத்தில் இன்று மீலாதுன் நபி விழா பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. 

மாலை சுமார் 6.15 மணியளவில் இங்கு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 60 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுடன் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. 

தற்கொலைப்படை கைவரிசையாக கருதப்படும் இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் இன்னும் பொறுப்பேற்று கொள்ளவில்லை. அத்துடன் இந்த தாக்குதல் நடைபெற்றபோது குறித்த மண்டபத்தில் சுமார் ஆயிரம் பேர் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது