மூதூரில் வாகன விபத்து வாலிபர் ஒருவர் மரணம்
இன்று மாலை சுமார் 6.30 மணியளவில் மூதூர் மத்திய கல்லூரி மைதானத்திற்கு அருகில் உள்ள பிரதான வீதியில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் மீது வேகமாக சென்ற பஸ் ஒன்று மோதியதில் ஒரு இளைஞன் மரணமடைதுள்ளதாக மூதூர் பொலிசார் தெரிவிக்கின்றனர் .
கல்முனையில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது . விபத்தை அடுத்து அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது உடன் ஸ்தலத்துக்கு சென்ற பொலிசார் நிலைமையை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் .
Comments
Post a Comment