கொஸ்கம முகாமின் ஆயுதக் கிடங்கில் தீ

கொஸ்கம , சாலாவ இராணுவ முகாமில் பாரிய வெடிப்புச் சத்தத்துடன் தீ ஏற்பட்டுள்ளது.
குறித்த இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கிலேயே குறித்த தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வெடிப்புச் சத்தம் கேட்டவுடன், பிரதேசவாசிகள் அங்கிருந்து அகன்றதாகவும் அச்சத்தம் பல கிலோ மீற்றர் தூரம் வரை கேட்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, குறித்த சம்பவம் காரணமாக ஏற்பட்ட சேதம் தொடர்பில் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை, பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி களுஅக்கல வரை அவிஸ்ஸாவளை - களுஅக்கல வீதி மூடப்பட்டுள்ளதோடு, அவிஸ்ஸாவளை - கொழும்பு வீதி அவிஸ்ஸாவளையில் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிய இணைப்பு
கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தினால் அதனைச் சூழ 8 மீற்றர் தூரத்தில் வசிப்போரை அந்த இடங்களிலிருந்து அகன்று செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்டுள்ள தீவிபத்தினால் ஒரு புறம் கலுஅக்கல வரையும் மறுபுறம் அவிஸ்ஸாவலை வரை வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த வெடிப்பு சம்பவத்தினால் இராணுவத்தினர் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை தீயைக் கட்டுப்படுத்த இராணுவத்தின் பெல் வர்க்க விமானம் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முப்படையினரும்,தீயணைப்பு படையிரும் தீயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும்,அந்தப் பிரதேசத்தைச் சூழவுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த வெடிப்பு சம்பவத்தின் சத்தமானது 50 கிலோமீற்றர தூரத்தில் உள்ள தெரணியகல நூரி தோட்டம் வரை கேட்டதாகவும், வெளிவரும் புகை,வெளிச்சங்களைக் கொண்டு கொஸ்கம பிரதேசத்தை பார்க்க கூடியதாகவுள்ளதாகவும் இந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்தப் பிரதேசத்துக்கான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2ம் இணைப்பு
தீயினை அடுத்து சிதறி விழும் பொருட்கள்
கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்டுள்ள தீவிபத்தினால் 10 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள பிரதேசங்களுக்கும் பொருட்கள் சிதறி விழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹங்வெல, அவிஸ்ஸாவளை பிரதேசங்களுக்கே குறித்த தீயினால் பொருட்கள் சிதறி விழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவிஸ்ஸாவளை வைத்தியசாலைக்கும் பொருட்கள் வந்து விழுவதால் நோயாளிகளை இடமாற்றியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் குறித்த பகுதியில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தும் வேலையை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த தீயினால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினரை மீட்பதற்காக சுகாதார பணிப்பாளர் பாலித மஹிபாலவின் அறிவுறுத்தலுக்கமைய 20 அம்யூலன்ஸ் வண்டிகள் அவிஸ்ஸாவளை வைத்தியசாலையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரத்தினபுரி, கொழும்பு, கரவனெல்ல, பாதுக்க, வதுபிட்டிவல, கம்பஹா, ராகம உள்ளிட்ட வைத்தியசாலைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த இடத்திற்கு சாகல ரத்னாயக்க உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் நேரடியாக சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
3ம் இணைப்பு
அவிசாவளை தேர்தல் தொகுதியின் பாடசாலைகள் அரச நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும்
கொஸ்கம இராணுவ முகாம் தீப்பரவல் சம்பவத்தை அடுத்து அந்தப்பகுதியில் இருந்துவெளியேறியுள்ள மக்களின் உடமைகளை பாதுகாக்க விசேட திட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளதாகஇராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அவசர நிலைமையை கருத்திற்கொண்டு நாளை அவிசாவளை தேர்தல் தொகுதியின்பாடசாலைகள் அரச நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவுதெரிவித்துள்ளது.


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது